Sponsors

Showing posts with label அறிவியல். Show all posts
Showing posts with label அறிவியல். Show all posts

Thursday, August 11, 2011

உணவு ஆதாரங்களை மேம்படுத்துதல்-2


1.தானியங்கள்-கார்போஹைட்ரேட்டுகள் 2.பருப்பு வகைகள்-புரதம்
3.இறைச்சி(ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி)மீன் மற்றும் முட்டை-கொழுப்பு மற்றும் புரதம்
4.பழங்கள் மற்றும் காய்கறிகள் குறிப்பாக பசலைக்கீரை,முட்டைக்கோசு போன்ற பச்சைக் காய்கறிகள்-தாது உப்புக்கள் மற்றும் வைட்டமின்கள்.
தாவரங்கள் காற்று,நீர் மற்றும்மண்ணிலிருந்து ஊட்டப்பொருட்களைப் பெறுகின்றன.தாவரங்களின் வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கத்திற்கு சுமார் 16 தனிமங்கள் இன்றியமையாதவையாக உள்ளன.
தாவரங்களின் தேவைக்கேற்ப தனிமங்கள் பெரும்ஊட்டத் தனிமங்கள்
(மேக்ரோதனிமங்கள்) மற்றும் நுண்ஊட்டத் தனிமங்கள் (மைக்ரோதனிமங்கள்) என மேலும்
வகைப்படுத்தப்படுகின்றன.
பெரும்ஊட்டத் தனிமங்கள் (மேக்ரோ தனிமங்கள்)
கார்பன், ஹைட்ரஜன்,உயிர்வளி (ஆக்ஸிஜன்), நைட்ரஜன், பாஸ்பரஸ்,கந்தகம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் இரும்பு ஆகியவை பெரும் ஊட்டத் தனிமங்கள் ஆகும்.
தாவர வளர்ச்சிக்குக் குறைந்த அளவே தேவைப்படும் தனிமங்கள் நுண்ஊட்டத் தனிமங்கள் எனப்படும். மாங்கனீசு, தாமிரம்,மாலிப்டினம், துத்தநாகம், போரான் மற்றும் குளோரின் ஆகியவை நுண்ஊட்டத் தனிமங்கள் ஆகும்.

மட்கியஉரம் (தொழுஉரம் அல்லது கம்போஸ்ட்) மற்றும் மண்புழு உரம்(வெர்மிகம்போஸ்ட்).
தாவர மற்றும் விலங்குக் கழிவுகளை விரைவில் சிதைப்பதற்காக மண்புழுக்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் தொழுஉரம் அல்லது இயற்கை உரம், மண்புழு தொழுஉரம் அல்லது மண்புழு இயற்கை உரம் எனப்படும்.
நைட்ரஜன் உரங்கள்---யூரியா, அம்மோனியம் சல்ஃபேட், அம்மோனியம் நைட்ரேட் போன்றவை.
பாஸ்பரஸ் உரங்கள்(கனிச் சத்துக்கள்)---தனி சூப்பர்பாஸ்பேட், டிரிப்பிள் சூப்பர் பாஸ்பேட்
பொட்டாசிய உரங்கள்(சாம்பல் சத்துக்கள்)---பொட்டாசியம் நைட்ரேட், பொட்டாசியம் குளோரைடு.
கலப்பு உரங்கள்--- நைட்ரோ பாஸ்பேட், அம்மோனியம் பாஸ்பேட்,டை-அம்மோனியம்-பாஸ்பேட்.
இயற்கை உரங்கள் செயற்கை உரங்கள்
இயற்கை உரங்கள், விலங்குக்கழிவு, மனிதக்கழிவு மற்றும் தாவரக்கழிவின்
சிதைவினால் தோன்றும் ஒரு இயற்கைப்
பொருள்.
செயற்கை உரம் கந்தகம், பாஸ்பரஸ், நைட்ரஜன் போன்ற ஊட்டப்பொருட்கள் அடங்கிய ஒரு தாது அல்லது வேதிக்கூட்டுப்பொருள்.
இயற்கை உரங்கள் கரிமப்பொருட்கள்
ஆகும்.
செயற்கை உரங்கள் கனிமப்பொருட்கள்
ஆகும்
இயற்கை உரங்கள் எல்லா ஊட்டப்
பொருட்களையும் குறைந்த அளவில்
கொண்டுள்ளன.
இவை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட
குறிப்பிட்ட ஊட்டப்பொருட்களை மட்டும்
அதிக அளவில் கொண்டுள்ளன.
இயற்கை உரங்கள் மண்ணிற்கு அதிக
அளவு மட்கினை சேர்த்து, மண்ணின்
தன்மையை மேம்படுத்துகின்றன.
செயற்கை உரங்கள் மண்ணிற்கு மட்கு
சேர்ப்பதில்லை.
இயற்கை உரங்கள் குறைந்த அளவே நீரில்
கரைகின்றன. இவை மண்ணிலிருந்து
எளிதில் நீரால் அடித்துச்செல்லப்படுவ
தில்லை. எனவே, இவற்றின் பயன் நீண்ட
நாட்களுக்கு நிலைத்திருக்கும்.
செயற்கை உரங்கள் எளிதில் நீரினால்
அடித்துச் செல்லப்படும். மேலும், இவற்றின்
விளைவு குறைந்த காலத்திற்கு மட்டுமே
வரும். எனவே, இவற்றை மீண்டும் மீண்டும்
உபயோகப்படுத்த வேண்டியுள்ளது.
உயிருள்ளவற்றிலிருந்து பெறப்படும் உரங்கள் உயிரி-உரங்கள் எனப்படும். உயிரி-உரங்களின் ஆதாரம் பாக்டீரியா,நீலப்பசும்பாசி (சயனோபாக்டீரியா)மற்றும் பூஞ்சைகள் ஆகும். உயிரி உரங்கள் மீண்டும் புதுப்பிக்கத்தகுந்த வகையில் மேலும் மாசுபடுத்தாத தாவர ஊட்டப்பொருட்கள் ஆகும்.
இவை மண்ணின் தன்மையையும் மேம்படுத்துகின்றன.ரைசோபியம் மற்றும் சயனோபாக்டீரியங்களான அனபீனா மற்றும் நாஸ்டாக் போன்றவை பொதுவான உயிரி-உரங்கள் ஆகும்.

உணவு ஆதாரங்களை மேம்படுத்துதல்-1

    உணவு ஆதாரங்களை மேம்படுத்துதல்

பூச்சிகளைக் கொல்லப் பயன்படும்வேதிப்பொருட்கள்-பூச்சிக்கொல்லிகள்(டைகுளோரோ டைபீனைல் ட்ரைகுளோரோ ஈத்தேன்,மாலத்தியான் போன்றவை).
பூஞ்சைகளை அழிக்க உதவும் வேதிப்பொருட்கள் பூஞ்சைக்கொல்லிகள்(போர்டாக்ஸ் கலவை)
களைகளை(தேவையற்ற செடிகள்)அழிக்கப்பயன்படும் வேதிப்பொருட்கள் களைக்கொல்லிகள்(2,4-D(2,4-டைகுளோரோ பீனாக்ஸி அசிட்டிக் அமிலம்)
எலிகள், சுண்டெலிகள் மற்றும் அணில்களைப் போன்ற கொறிக்கும் விலங்குகளைக் கொல்லப் பயன்படும் வேதிப்பொருட்கள் எலிக்கொல்லிகள்(துத்தநாகபாஸ்பேட், ஆர்சனிக்)
மெல்லும் பூச்சிகள்
இவை தாவரங்களின் வேர், தண்டு மற்றும் இலைகளைக் கடித்து மெல்லும் தன்மை
கொண்டவை. .கா. வெட்டுக்கிளிகள், கம்பளிப் பூச்சிகள்
உறிஞ்சும் பூச்சிகள்-இலைத்தத்துப் பூச்சிகள்,அசுவனி(தாவரப்பேன்)
துளைக்கும் பூச்சிகள்-கரும்புத் துளைப்பான்.
மண்ணில் பூச்சிக்கொல்லிகளைக்கலப்பதன் மூலம் வேர் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த-குளோரோபைரிபாஸ்.
தண்டு மற்றும் இலைகளைக் கடிக்கும் மற்றும் துளைக்கும் பூச்சிகளை,பூச்சிக்கொல்லிகளைத் தூவுதல் அல்லது தெளித்தல் மூலம் கட்டுப்படுத்தலாம்.(மாலத்தியான், லின்டேன் மற்றும்
தையோடான்.)
சாறு உறிஞ்சும் பூச்சிகளை, பூச்சி கொல்லிகளைத் தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம். (டைமீத்தோயேட் மற்றும் மெட்டாசிஸ்டாக்ஸ்)
பயிர் நோய்கள்
விதைகள் மூலம் பரவும் நோய்கள்-நெல்லின் இலைப்புள்ளி,நோய் கோதுமையின் கரும்புள்ளி நோய்.மண் மூலம் பரவும் நிலக்கடலையின் இலைப்புள்ளி நோய்(டிக்கா நோய்) .காற்று மூலம்
பரவும் நோய்கள்-நெல்லின் வெப்பு நோய், கோதுமையின் துரு நோய்.நீர் மூலம் பரவும்
நோய்கள்-நெல்லின் பாக்டீரிய வாடல் நோய்.
மாறுபட்ட ஜீனாக்கம் கொண்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தாவரங்களைக் கலப்பு செய்து, மேம்படுத்தப்பட்ட ரகங்களை உருவாக்கும் முறை கலப்பினப்பெருக்கம் அல்லது கலப்பினச்சேர்க்கை எனப்படும்.
  • கால்சியம்--எலும்பு கட்டுமானம் மற்றும் பராமரிப்பு.
  • வைட்டமின் D--கால்சியம் வளர்சிதைமாற்றத்தைத் தூண்டுதல்.
  • புரதம்--தசைகள் கட்டுமானம் மற்றும் சீர்செய்தல்.
  • பொட்டாசியம்--இரத்த அழுத்தத்தைப் பராமரித்தல்.
  • வைட்டமின்B2-- செல்களின் வளர்சிதைமாற்றம்.
  • வைட்டமின்B4-- நொதிகளின் செயல்பாடுகள்.
  • வைட்டமின்B12-- இரத்தச் சிவப்பணுக்களின் முதிர்ச்சி.
வெண்மைப் புரட்சி என்பது புதிய மேம்படுத்தப்பட்ட கால்நடைகளைப் பயன்படுத்தி அதிக பால் உற்பத்தியைப் பெருக்குவதாகும்..குரியன் என்பவரை வெண்மைப் புரட்சியின் தந்தை என்று கூறுவார்கள்.
தகுந்த முறையில் கோழி வளர்ப்பின் மூலம் சமீபகாலங்களில் முட்டை உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு வெள்ளிப் புரட்சி என்று பெயர்.
சிட்டகாங்,அசீல்,கரக்நாத் மற்றும் பஸ்ரா ஆகியவை இந்திய இனக்கோழிகளாகும்.
ப்ரம்மா மற்றும் லாங்ஷான் ஆகியவைஆசிய இனக் கோழிகளாகும்.
ப்ளைமௌத் ராக்,லெக்ஹான், ரோட்அய்லான்டு, ப்ளாக்மினார்க்கா ஆகியவை அயல்நாட்டு இனக்
கோழிகளாகும்.
வெள்ளை லெக்ஹான் வகை உலகிலேயே மிக அதிக முட்டைகள் கொடுக்கும் இனம்.கோழி உற்பத்தியில் இந்தியா உலகஅளவில் ஐந்தாவது இடம் வகிக்கிறது.
கருவுறா முட்டைகள் சைவ முட்டைகள் எனக் கூறுகின்றனர்.
முட்டையில் சுண்ணாம்பு, பாஸ்பரஸ், சோடியம்,Vitamin D,B1,B12முதலியனவும் உள்ளன.

இந்திய மீன்துறை தகவல்கள்
1.மொத்த மீன் உற்பத்தி - உலகத்தில்7வது இடம்.2. கடல் மீன் உற்பத்தி - உலகத்தில் 10வது இடம்.3. நீர் உயிரி வளர்ப்பு - தென்கிழக்கு ஆசியாவில் 2 வது இடம்.4. மீன் தொழிற்துறையின் பங்கு -ஓராண்டிற்கு 400 கோடி அந்நிய செலாவணி.
மீன் உணவில் விலங்குப் புரதம்,வைட்டமின் மற்றும் தாதுக்கள் அதிகம் காணப்படுகிறது. மீன் உணவில் உள்ள வைட்டமின் D கண்பார்வைக் குறைபாடுகளை நீக்கவும் சிறந்த கண்பார்வைக்கும் பெரிதும் உதவுகிறது. பியாட்டின், நியாசின்,வைட்டமின்B6, வைட்டமின்B12, வைட்டமின் D மற்றும்
பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு போன்ற தாதுக்களையும் கொண்டுள்ளது.
தேனீ வளர்ப்பு
ஒரு தேன்கூட்டில் மூன்று வகையான தேனீக்கள் காணப்படுகின்றன.
இராணித்தேனீ
ஒரு தேன் கூட்டில் ஒரே ஒரு இராணித் தேனீ மட்டுமே இருக்கும். இதன் வேலை முட்டையிடுதல்.
ஆண் தேனீக்கள்
இவை இனப்பெருக்கத்திற்கு தகுதியானவை.இராணித் தேனீயுடன் இணைந்து இனப்பெருக்கம் செய்வது மட்டுமே இவைகளின் வேலை.
வேலைக்காரத் தேனீக்கள்
இவை மலட்டுத் தேனீக்கள் இராணித் தேனீயை கவனித்துக்கொள்ளுதல், தேன்சேகரித்தல்,
கூட்டைக் கட்டுதல் மற்றும் பாதுகாப்பு போன்றபணிகளைச் செய்கின்றன.
தேனீ இனங்கள்
) உள்நாட்டுத் தேனீ இனங்கள்
i) ஏபிஸ் இன்டிகா - பொதுவான இந்தியத் தேனீ ii) ஏபிஸ் டார்சேட்டா - பாறைத் தேனீ
iii) ஏபிஸ் புளோரியா - குட்டித் தேனீ
) அயல்நாட்டுத் தேனீ இனங்கள்
i) ஏபிஸ் மெலிஃப்ரா - இத்தாலிய தேனீ ii) ஏபிஸ் ஆடம்சோனி - தென்ஆப்ரிக்க தேனீ
தேனானது ஊட்டச்சத்து மிகுந்த ஓர் உணவாகும். ஒரு கிலோ தேன் 3200 கலோரி சக்தியைத் தரும் திறனுடையது.
தேனீக்களில் செய்தி பரிமாற்றம் (நடன முறை)
பூந்தேன் 100 மீ வளைவிற்குள் இருப்பதை வட்ட நடனம் தெரிவிக்கிறது. அசைவு நடனம் நீண்ட தொலைவைக் குறிக்கிறது. நடன அசைவுகள் பூந்தேன், சூரியனுக்கு எந்த திசையில் உள்ளது என்பதைக் குறிக்கிறது. மேற்கூறிய நடன அசைவுகளைவிளக்கியதற்காக 1973ல் கார்ல் வான் ப்ரிஷ் என்பவர் நோபல் பரிசைப் பெற்றார்.