Sponsors

Thursday, August 11, 2011

உணவு ஆதாரங்களை மேம்படுத்துதல்-2


1.தானியங்கள்-கார்போஹைட்ரேட்டுகள் 2.பருப்பு வகைகள்-புரதம்
3.இறைச்சி(ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி)மீன் மற்றும் முட்டை-கொழுப்பு மற்றும் புரதம்
4.பழங்கள் மற்றும் காய்கறிகள் குறிப்பாக பசலைக்கீரை,முட்டைக்கோசு போன்ற பச்சைக் காய்கறிகள்-தாது உப்புக்கள் மற்றும் வைட்டமின்கள்.
தாவரங்கள் காற்று,நீர் மற்றும்மண்ணிலிருந்து ஊட்டப்பொருட்களைப் பெறுகின்றன.தாவரங்களின் வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கத்திற்கு சுமார் 16 தனிமங்கள் இன்றியமையாதவையாக உள்ளன.
தாவரங்களின் தேவைக்கேற்ப தனிமங்கள் பெரும்ஊட்டத் தனிமங்கள்
(மேக்ரோதனிமங்கள்) மற்றும் நுண்ஊட்டத் தனிமங்கள் (மைக்ரோதனிமங்கள்) என மேலும்
வகைப்படுத்தப்படுகின்றன.
பெரும்ஊட்டத் தனிமங்கள் (மேக்ரோ தனிமங்கள்)
கார்பன், ஹைட்ரஜன்,உயிர்வளி (ஆக்ஸிஜன்), நைட்ரஜன், பாஸ்பரஸ்,கந்தகம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் இரும்பு ஆகியவை பெரும் ஊட்டத் தனிமங்கள் ஆகும்.
தாவர வளர்ச்சிக்குக் குறைந்த அளவே தேவைப்படும் தனிமங்கள் நுண்ஊட்டத் தனிமங்கள் எனப்படும். மாங்கனீசு, தாமிரம்,மாலிப்டினம், துத்தநாகம், போரான் மற்றும் குளோரின் ஆகியவை நுண்ஊட்டத் தனிமங்கள் ஆகும்.

மட்கியஉரம் (தொழுஉரம் அல்லது கம்போஸ்ட்) மற்றும் மண்புழு உரம்(வெர்மிகம்போஸ்ட்).
தாவர மற்றும் விலங்குக் கழிவுகளை விரைவில் சிதைப்பதற்காக மண்புழுக்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் தொழுஉரம் அல்லது இயற்கை உரம், மண்புழு தொழுஉரம் அல்லது மண்புழு இயற்கை உரம் எனப்படும்.
நைட்ரஜன் உரங்கள்---யூரியா, அம்மோனியம் சல்ஃபேட், அம்மோனியம் நைட்ரேட் போன்றவை.
பாஸ்பரஸ் உரங்கள்(கனிச் சத்துக்கள்)---தனி சூப்பர்பாஸ்பேட், டிரிப்பிள் சூப்பர் பாஸ்பேட்
பொட்டாசிய உரங்கள்(சாம்பல் சத்துக்கள்)---பொட்டாசியம் நைட்ரேட், பொட்டாசியம் குளோரைடு.
கலப்பு உரங்கள்--- நைட்ரோ பாஸ்பேட், அம்மோனியம் பாஸ்பேட்,டை-அம்மோனியம்-பாஸ்பேட்.
இயற்கை உரங்கள் செயற்கை உரங்கள்
இயற்கை உரங்கள், விலங்குக்கழிவு, மனிதக்கழிவு மற்றும் தாவரக்கழிவின்
சிதைவினால் தோன்றும் ஒரு இயற்கைப்
பொருள்.
செயற்கை உரம் கந்தகம், பாஸ்பரஸ், நைட்ரஜன் போன்ற ஊட்டப்பொருட்கள் அடங்கிய ஒரு தாது அல்லது வேதிக்கூட்டுப்பொருள்.
இயற்கை உரங்கள் கரிமப்பொருட்கள்
ஆகும்.
செயற்கை உரங்கள் கனிமப்பொருட்கள்
ஆகும்
இயற்கை உரங்கள் எல்லா ஊட்டப்
பொருட்களையும் குறைந்த அளவில்
கொண்டுள்ளன.
இவை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட
குறிப்பிட்ட ஊட்டப்பொருட்களை மட்டும்
அதிக அளவில் கொண்டுள்ளன.
இயற்கை உரங்கள் மண்ணிற்கு அதிக
அளவு மட்கினை சேர்த்து, மண்ணின்
தன்மையை மேம்படுத்துகின்றன.
செயற்கை உரங்கள் மண்ணிற்கு மட்கு
சேர்ப்பதில்லை.
இயற்கை உரங்கள் குறைந்த அளவே நீரில்
கரைகின்றன. இவை மண்ணிலிருந்து
எளிதில் நீரால் அடித்துச்செல்லப்படுவ
தில்லை. எனவே, இவற்றின் பயன் நீண்ட
நாட்களுக்கு நிலைத்திருக்கும்.
செயற்கை உரங்கள் எளிதில் நீரினால்
அடித்துச் செல்லப்படும். மேலும், இவற்றின்
விளைவு குறைந்த காலத்திற்கு மட்டுமே
வரும். எனவே, இவற்றை மீண்டும் மீண்டும்
உபயோகப்படுத்த வேண்டியுள்ளது.
உயிருள்ளவற்றிலிருந்து பெறப்படும் உரங்கள் உயிரி-உரங்கள் எனப்படும். உயிரி-உரங்களின் ஆதாரம் பாக்டீரியா,நீலப்பசும்பாசி (சயனோபாக்டீரியா)மற்றும் பூஞ்சைகள் ஆகும். உயிரி உரங்கள் மீண்டும் புதுப்பிக்கத்தகுந்த வகையில் மேலும் மாசுபடுத்தாத தாவர ஊட்டப்பொருட்கள் ஆகும்.
இவை மண்ணின் தன்மையையும் மேம்படுத்துகின்றன.ரைசோபியம் மற்றும் சயனோபாக்டீரியங்களான அனபீனா மற்றும் நாஸ்டாக் போன்றவை பொதுவான உயிரி-உரங்கள் ஆகும்.

0 comments:

Post a Comment